இலங்கை செல்லும் வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டணம்

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக சுவசரிய அம்பியூலன்ஸ் சேவையை நடத்தி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து 20 டொலர் தொகையை பெற்றுக்கொள்ளும் யோசனையை முன்வைப்பதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இந்த தொகையை விமான டிக்கெட்டில் சேர்த்து வசூலிப்பது தொடர்பான முன்மொழிவு எதிர்வரும் வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு விபத்துகள் ஏற்பட்டால், வெளிநாட்டவரின் விருப்பப்படி விபத்து நடந்த இடத்திற்குச் சென்று அவரை அரச அல்லது தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சுவசரிய தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here