அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கை தொடர்பான தமது பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது.
இதன்படி, இலங்கையின் எச்சரிக்கை மட்டமானது நான்கிலிருந்து மூன்றாவது மட்டத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், நாட்டில் நடைபெற்று வரும் சிவில் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் செயல்கள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளுமாறும், முடிந்தவரை அவ்வாறான இடங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார பின்னடைவு காரணமாக சுற்றுலா வசதிகளை மேற்கொள்ளல், எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான வரிசைகள் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முந்தைய பயண ஆலோசனை அறிக்கையும் எச்சரித்திருந்தது.