இலங்கை சென்ற பிரித்தானிய பெண்ணின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது ஏன்?

0

மருத்துவ காரணங்களுக்காக இலங்கை வந்துள்ள பிரித்தானிய பெண் ஒருவரின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் நாட்டில் தங்கியிருக்கும் போது விசா நிபந்தனைகளை மீறியுள்ளாரா என்பது குறித்து விசாரிக்க உள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த கெய்லீ ஃப்ரேசர் 2019ம் ஆண்டு முதல் கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் இருந்ததாகவும், அவர் தங்கியிருந்த காலத்தில் இங்கிலாந்திற்கு பல முறை விஜயம் செய்ததாகவும் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த செவ்வாயன்று அவரது உள்ளூர் இல்லத்திற்குச் சென்று அவரது கடவுச்சீட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.

மேலும் குறித்த பெண் ஏதேனும் குடிவரவுச் சட்டங்களை மீறியுள்ளாரா அல்லது விசா நிபந்தனைகளை மீறினாரா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.

அடுத்த ஏழு நாட்களுக்குள் திணைக்களத்திற்கு வருகை தருமாறு அந்த பெண்ணுக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர் விசாரணைக்கு வந்தவுடன், மேலும் விசாரணை தொடரும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here