இலங்கை சுகாதார அமைச்சில் பதற்ற நிலை

0

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் சுகாதார அமைச்சின் முன்னால் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, குறித்த வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்ததையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சுக்கு முன்பாக டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, நகர மண்டப பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here