இலங்கை சமூகத்தில் ஆயிரக்கணக்கானோர் டெல்டா திரிபினால் பாதிப்பு?

0

இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்கள் டெல்டா கொவிட் வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது இடம்பெறுகின்ற சுகாதாரத் தரப்பின் போராட்டம் காரணமாக இந்த நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்டா திரிபு எதிர்காலத்தில் இலங்கை முழுவதும் வியாபிக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.

எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here