இலங்கை கோவிட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு அமெரிக்காவின் மகத்தான பங்களிப்பு!

0

கோவிட் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த இலங்கை மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கான ஒரு பங்களிப்பாக அமெரிக்கா ஒரு தொகை மருத்துவ உப கரணங்களை நேற்று நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.

முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களாகவும், கோவிட் நோயாளிகளுக்கான சிகிச்சைக் கருவிகள் மற்றும் மருத்துவப் பொருட்களாகவும் – அமெரிக்க மக்களால் வழங்கப்பட்ட 120 கோடி ரூபாய்கள் பெறுமதியான அன்பளிப்பு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் முகவர் நிலையத்தினால் இவ்வாறு சிறப்பு விமானத்தினூடாக நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அமெரிக்காவின் இந்த உதவிக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நன்றிகளை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here