இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல

0

2022 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல ஜயவர்தன இணையவுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனைத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாமிற்கு அனுமதி வழங்கியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தமது உத்தியோகபூர்வ ட்விட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண இலங்கை குழாமுக்கு நேற்று (13) அளித்துள்ளதாகவும், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட குழாம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

ஒக்டோபர் முதல் வாரத்தில் பல்லேகலவில் நடைபெறும் பயிற்சி முகாமின் பின்னர், போட்டிக்கான அணி புறப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here