இலங்கை கிரிக்கெட் அணியின் 3 வீரர்களுக்கு நேர்ந்த கதி….

0

இலங்கை கிரிக்கெட் அணியானது இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்கு சென்றுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் நேற்று 27 ஆம் திகதி இரவு டராம் நகரில் சுற்றித்திரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகிய மூன்று வீரர்களுக்கும் எதிராக தற்காலிக போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில் இந்த தற்காலிக தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here