இலங்கை கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

0

2020 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அழகியல் பாடங்களுக்கு அமர்ந்த மாணவர்களை க.பொ.த உயர்தர வகுப்புகளில் இணைப்பதற்கான குறைந்த பட்ச தகுதிகளை மேற்கோள் காட்டி கல்வி அமைச்சால் ஒரு விஷேட சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.

க.பொ.த சாதாணர தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்ட போதிலும் கொவிட்-19 தொற்று காரணமாக அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் நிறுத்தப்பட்டன.

அழகியல் பாடங்களுக்கு அமர்ந்து இரு திறமைச் சித்திகள் உட்பட 5 பாடங்களில் சித்தி பெற்று 1 முதல் 3 வரையான திறன் மட்டம் கொண்ட மாணவர்கள் உயர்தர வகுப்புகளுக்குச் செல்ல முடியும் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டார்.

2020 சாதாரண தர பரீட்சையில் சுமார் 170,000 மாணவர்கள் அழகியல் பாடங்களுக்கு அமர்ந்துள்ளனர். பாடசாலைகள் திறந்தவுடன் இந்தப் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here