இலங்கை கடன் அட்டை பயனாளர்களுக்கு எச்சரிக்கை

0

இலங்கை கடன் அட்டை பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடுதும்பர மற்றும் அயகமவில் ஆகிய பிரதேசங்களில் கடனட்டைகள் திருடப்பட்ட இரண்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.

மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடுதும்பர பகுதியில் திருடப்பட்ட கடனட்டையில் இருந்து 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணமும் மற்றும் அயகம பிரதேசத்தில் திருடப்பட்ட கடனட்டையில் இருந்து சுமார் 4 இலட்சம் ரூபாய் பணமும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த கடனட்டைகளுடன் இரகசிய எண்ணையும் வைத்திருந்த காரணத்தால் சந்தேகநபர்களால் குறித்த பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி, கடனட்டைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் அதனுடன் இரகசிய எண்ணை வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here