அண்மைக்காலங்களாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைபெற்ற அசாதாரண சம்பவங்களை அடுத்து, இவற்றை கண்காணிக்கும் வகையில் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடுமையான நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நிற்பதேடு மோதல் நிலைகளும் உருவாகின்றன.
நேற்றைய தினம் மோதல் முற்றி கொலையில் முடிவடைந்தது.எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மயங்கிவிழுந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
இதையடுத்தே நிலைமையை கட்டுப்படுத்த நாட்டில் இன்று முதல் அனைத்து சிப்பெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடவுள்ளனர்.
அதன்படி, எரிபொருள் விநியோகத்தை மேற்பார்வை செய்வதற்காக இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்