இலங்கை எந்த நேரத்திலும் முடகப்படலாம்! இராணுவ தளபதி அறிவிப்பு

0

இலங்கையில் கோவிட் வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவாக இராணுவ தளபதி எச்சிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் எந்த இடமும் எந்த நேரத்திலும் தனிமைப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த சில வாரங்களாக கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறையினர் வழங்கும் வழிகாட்டல்களை மக்கள் பின்பற்றுவது அவசியமாகும்.

பண்டிகைக் காலத்தில் மக்கள் இதுபற்றி கூடுதல் கவனம் செலுத்தவில்லை. நோய் பரவலை கருத்திற் கொண்டு பாடசாலைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதா என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here