இலங்கை எந்த நேரத்திலும் முடக்கப்படலாம்! அரசாங்கம் அறிவிப்பு

0

சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை மூடும் முடிவை எட்ட தயங்க மாட்டோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டை மூடக்கூடாது என்ற பிடிவாதமான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த, வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை மூடும் முடிவை அரசாங்கம் எடுக்கத் தவறினால் தனியார் மற்றும் அரச துறை சேவைகள் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here