இலங்கை மீண்டும் முடக்கப்படும் அபாயம்! சுகாதார தரப்பு வெளியிட்ட தகவல்

0

நாடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மூடப்படும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

நாட்டை மூட வேண்டும் என்றால், சுகாதார வழிகாட்டி மாத்திரமே வெளியிடப்பட வேண்டும் என அவர் கூறுகின்றார்.

நாட்டு மக்களின் செயற்பாடுகளின் ஊடாகவே, நாட்டை முடக்குவதா? இல்லையா? என்ற தீர்மானத்தை எட்ட முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் நத்தார் பண்டிகை காலப் பகுதியில் நாட்டை முடக்கினால், அது குறித்து ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் கூறுகின்றார்.

பொறுப்பற்றவர்கள், பொறுப்பற்ற விதத்தில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாகவும், அது பாரதூரமான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

அனுமதியின்றி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் பட்சத்தில், முன்னறிவித்தல் இன்றி அதனை ரத்து செய்ய முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.கூறுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here