இலங்கையில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? நாளை தீர்மானம்

0

இலங்கை முழுவதும் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை தொடர்ந்தும் நீடிப்பதா என்பது தொடர்பான தீர்மானம் நாளைய தினம் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா ஒழிப்பு செயலணியின் விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.

இதன்போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது எதிர்வரும் திங்கட்கிழமை (13) அதிகாலை 4 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அநேகமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here