இலங்கை இளைஞர்கள் எடுத்துள்ள தீர்மானம்! எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

0

இலங்கையை சேர்ந்த பல இளைஞர்கள் அடுத்த சில வருடங்களில் வெளிநாடுகளிற்கு செல்ல காத்திருப்பதாக தெரிவித்து தடுப்பூசிகளை தவிர்ப்பதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக அவர்கள் பைசர் மொடேர்னா போன்றவற்றையே கோருகின்றனர் சினோபார்ம் தடுப்பூசியை செலுத்த மறுக்கின்றனர்.

அதற்கு காரணமாக தாங்கள் வெளிநாடுகளிற்கு செல்லவேண்டியுள்ளது என தெரிவிக்கின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்குலக நாடுகள் சினோபார்ம் தடுப்பூசி குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன ஆனால் சினோபார்ம் சிறந்தது என நிருபிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இளைஞர்கள் தங்களுடைய விருப்பத்தை கொண்டுள்ளனர் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் டெல்டாவினால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகமாக உள்ளது என எச்சரித்துள்ள சுகாதார அதிகாரிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத இளைஞர்களுக்கும் இந்த ஆபத்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

நாடு வழமைக்கு திரும்பவேண்டும் என்றால் இந்த வயதினருக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சினோபார்ம் தடுப்பூசி செலுத்தினாலும் எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளுக்கு செல்ல எவ்வித தடையும் ஏற்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிடைக்கும் தடுப்பூசிகளை செலுத்திக் கொளள் வேண்டும் என இளைஞர்களுக்கு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here