இலங்கை இளைஞர்களால் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆபத்து!

0

இலங்கையின் இளம் வயதினர் தடுப்பூசி குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்தாவிட்டால் இலங்கையின் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளிற்கு ஆபத்து ஏற்படலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரசினை செலுத்துவது குறித்து இளம்வயதினர் மத்தியில் ஆர்வமின்மை காரணமாக தாங்கள் கடும் அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

20 முதல் 29 வயதிற்குட்பட்டவர்களை தங்கள் சந்தேகங்களை கேள்விகளாக முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள தெரிவித்துள்ள சிரேஸ்ட மருத்துவ அதிகாரியொருவர் அவர்கள் கேட்ட கேள்விகள் கற்பனை செய்ய முடியாதவை என குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கமொன்று உருவாகிவருகின்றது என தெரிவித்துள்ள மருத்துவர்கள் இதன் காரணமாக இளைஞர்கள் கட்டுக்கதை தவறான கருத்துக்களிற்கு பலியாகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளனர்.

உங்களிற்கு இந்த தகவல்களை யார் தெரிவித்தது என நாங்கள் கேள்வி எழுப்பியவேளை அவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் இந்த தகவல்களை பெற்றதாக தெரிவித்துள்ளனர் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் 90 வீதமானவை போலியானவை என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது நிச்சயமாக தடுப்பூசிக்கு எதிரானவர்களின் நடவடிக்கை என தெரிவித்துள்ள மருத்துவ அதிகாரிகள் இளைஞர்கள் எழுப்பும் கேள்விகள் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளன கல்விகற்றவர்களிற்கு தடுப்பூசி குறித்து இவ்வளவு குறைவான விடயங்கள் தெரிந்திருக்கின்றனவா என ஆச்சரியம் எழுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இயக்கத்தின் முக்கிய பிரச்சினை கொவிட் 19 இல்லை, உண்மையான பிரச்சினையை நாங்கள் ஐந்து முதல் 10 வருடங்களிலேயே பார்க்கப்போகின்;றோம் இந்த இளைஞர்கள் பெற்றோர்களானவுடன் இவர்கள் குழந்தைகளிற்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து பெரும் பிரச்சினையை எதிர்கொள்வார்கள்.

இது இலங்கையின் அனைத்து தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இது பாரிய பிரச்சினை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here