இலங்கை இராணுவ தளபதிக்கு பிரித்தானியாவில் தடை விதிக்கப்படுமா?

0

இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு பிரித்தானியாவில் தடை விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்களுக்காக தடை விதிக்க வேண்டும் என இங்கிலாந்தின் Eastham, பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் டிம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தவர்களை தண்டிக்க இந்த தடை பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா உரிய நேரத்தில் இந்த தடையை விதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது பொது மக்கள், வைத்தியசாலைகள், யுத்தசூன்ய பிரதேசம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், சவேந்திர சில்வா தலைமை தாங்கிய 58ஆவது படையணியால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு சவேந்திர சில்வா, இலங்கையின் இராணுவத்தளபதியாக தரமுயர்த்தப்பட்டார்.

இந்த பதவியுயர்வு அறிவிக்கப்பட்டமையை அடுத்து மனித உரிமை மீறல் விடயத்தில் சம்பந்தப்பட்டமை தொடர்பில் நம்பத்தகுந்த தகவல்கள் இருப்பதாக கூறி, அமெரிக்கா அவருக்கு தடையை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here