இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம்!

0

இலங்கை அரசாங்கத்தின் ஆட்சிக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் அதற்கு ஆதரவாக தாங்கள் வசிக்கும் நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், பிரித்தானியாவின் ஹென்லி பிரதேசத்தில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்று, இன்றைய தினம் கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதேவேளை, நேற்று அவுஸ்திரேலியா – மெல்போர்ன் நகரிலும், ஜப்பான் – டோக்கியோ மற்றும் பல நகரங்களிலும், இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்ப்பு பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

கடந்த வாரம், ஸ்கொட்லாந்தின் பேர்த் மற்றும் டண்டி மற்றும் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கிலும் இலங்கையர்கள் தங்கள் தாயகத்தைப் பாதுகாக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here