இலங்கை அரசியல் அரங்கை புரட்டிப் போட்ட கோழி முட்டைகள்!

0

நாட்டில் கடந்த சில வாரங்களாக அரசியல் அரங்கில் பேசுபொருளாக கோழி முட்டை விவகாரம் மாறியுள்ளது.

எதிர்காலத்தில் சந்தையில் முட்டை மற்றும் குஞ்சுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என முட்டை மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான கடனுதவிகளை திறப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் கால்நடை தீவனங்களின் விலையேற்றம் காரணமாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழிலை விட்டு வெளியேறி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அண்மையில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையானது முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது, அதன்படி வெள்ளை முட்டை 43 ரூபாவிற்கும் பழுப்பு அல்லது சிவப்பு முட்டை 45 ரூபாவிற்கும் விற்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், 50 ரூபாவிற்கும் குறைவான முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சோதனையிட வேண்டாம் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ வாய்மொழியாக ஒப்புக்கொண்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here