சமகால அரசாங்கத்தை பதவி விலகக் கோரி மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் ஒரு மாதத்தை அண்மித்துள்ளது.
எனினும் இதுவரை ஆட்சியில் இருந்து வெளியேற ராஜபக்ஷ சகோதரர்கள் முடிவு செய்யவில்லை. பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி தமது இருப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்துள் மக்கள் தமது போராட்ட வடிவங்களை மாற்றி வருகின்றனர்.
ஜனாதிபதி செயலக்திற்கு முன்பாக முகாமிட்டுள்ள மக்கள் சுமார் ஒரு மாதகாலமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில், பல்கலைக்கழக மாணவர்களும் அவ்வப்போது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆட்சியாளர்களை அகற்றும் நடவடிக்கையாக இலங்கையின் உயர்பீடமான நாடாளுமன்றத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது வன்முறைகளும் பதிவாகி உள்ளன.
இவ்வாறான நிலையில் நாடாளுமன்ற வளாகத்தை அணிமித்த பகுதியில், பொலிஸாரின் தடுப்புகளுக்கு முன்னாள் உள்ளாடைகளை காட்சிப்படுத்தி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்களின் உள்ளாடைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.
உலகத்தில் இதுவரை எந்தவொரு நாட்டு அரசாங்கத்திற்கும் இவ்வாறானதொரு ஆர்ப்பாட்டங்களை மக்கள் முன்னெடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ராஜபக்ஷ சகோதர்களை அசிங்கப்படுத்தும் வகையில் ஆண்களும் பெண்களும் இணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளாடை போராட்டம் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.