இலங்கை அமைச்சரவையில் பாரிய மாற்றம்

0

அமைச்சரவையில் முக்கிய அமைச்சுப் பதவிகளில் பாரிய மாற்றமொன்று விரைவில் ஏற்படவுள்ளதாக ஜனாதிபதி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் மாற்றமொன்று ஏற்பட வாய்ப்பிருப்பாக முன்னதாகவே செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனடிப்படையில் வெளியுறவு, சுகாதாரம், கல்வி, சுற்றுலா, மின்சாரம் மற்றும் ஊடகம் போன்ற முக்கிய அமைச்சகங்களில் ஜனாதிபதி மாற்றம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படாமல், குறித்த அமைச்சசுப் பதவிகள் அவர்களுக்குள்ளே கைமாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்படவுள்ள, அதே நேரத்தில் தற்போது பதவியை வகிக்கும் தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராக பொறுப்பேற்பார்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டவுள்ள, அதே நேரத்தில் அவரது தற்போதைய அமைச்சு கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

அமைச்சர் ரம்புக்வெல்லவின் ஊடக அமைச்சு மின்துறை அமைச்சராக இருக்கும் டளஸ் அழகப்பெருமவுக்கு வழங்கப்படவுள்ளது.

மின்சக்தி அமைச்சகம் தற்போதைய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் ஒப்படைக்கப்படவுள்ள அதேவேளைடு, சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா புதிய கல்வி அமைச்சராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அமைச்சரவை மாற்றங்கள் அடுத்த சில நாட்களில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here