இலங்கை அணி வீரர்களுக்கு அபராதம் விதிப்பு! ஐசிசியின் அதிரடி

0

இலங்கை அணிமேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அதில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என இழந்தது.

இதைதொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் உடனான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என ஒயிட்வாஷ் ஆனது இலங்கை அணி.

இந்நிலையில், Antigua-வில் நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இலங்கை வீரர்களின் போட்டி சம்பளத்தில் 40% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், புள்ளிகள் பட்டியலில் இருந்து இலங்கை அணிக்கு இரண்டு புள்ளிகள் பறிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கிந்திய தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரனிடம் மோசமாக நடந்துக்கொண்டதற்காக இலங்கை ஆல்-ரவுண்டர் தனுஷ்க குணதிலகாவிற்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்க்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here