இலங்கை அணி இனிமேலும் எப்படி அரையிறுதிக்கு முன்னேற முடியும்?

0

தற்போது இடம்பெறும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் லீக் சுற்றில் நான்கு போட்டிகளுக்குப்

பின்னர் இலங்கை அணிக்கு இரண்டு போனஸ் புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஒரு போட்டியில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் தான் இவ்வாறான குறைவான புள்ளிக்கு காரணம்.

இந்த சுற்றில் விளையாடி வரும் இலங்கை அணிக்கு தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டம் மட்டுமே உள்ளது.

எனினும் இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதிபெற மற்றுமொரு மிக அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூற்றுப்படி,

1 – மேற்கிந்திய தீவுகள் உடனான போட்டியில் இலங்கை வெற்றி பெறுவது அவசியம். அப்பொழுது இலங்கைக்கு அதிகபட்சமாக 4 புள்ளிகள் கிடைக்கும்.

இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி பெற இது போதாது.

2 – தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை பங்களாதேஷ் அணி வெல்ல வேண்டும்.

3 – அத்துடன் மேற்கிந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும்,

4 – இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த வேண்டும்.

இவை எல்லாவற்றையும் தாண்டி , அரையிறுதிக்கு தகுதி பெற, குருப்பில் உள்ள மற்ற அணிகளின் நெட் ரன் ரேட்டும் குறைய வேண்டும்.

இவை அனைத்து நிறைவேறுவது ஒரு அதிசயமாக இருக்கும் ம் என்று விளையாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நேற்றைய போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தாலும், இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் இலங்கையின் வனிது ஹசரங்க ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here