இலங்கையை வாங்கிக்கொள்ளுங்கள்….! எலான் மஸ்கிடம் கோரிக்கை!

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்ட மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கைக்கு இந்தியா மற்றும் சீனா கடனுதவி வழங்கி வருகின்றது.

இந்நிலையில் ட்விட்டர் பயனாளர்கள் உலகின் முன்னணி கோடீஸ்வரராக வலம்வரும் எலான் மஸ்கிடம் (Elon Musk)இலங்கையை வாங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ. 3.12 லட்சம் கோடி) வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்(Elon Musk) கடந்த 14 ஆம் திகதி தெரிவித்தார்.

ட்விட்டர் நிறுவனத்தில் சுமார் 9 சதவிகித பங்குகளை வைத்துள்ள அவர், அதன் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற மாட்டேன் எனக் கூறிய அடுத்த இரு தினங்களிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நிலையில் ட்விட்டர் பயனாளர்கள் சிலர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்குப் பதில் இலங்கையை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ட்விட்டர் பயனாளர் ஒருவர் “நீங்கள் ஏதாவது வாங்க நினைத்தால், இலங்கையை வாங்கிக்கொள்ளுங்கள்.

ட்விட்டரை விட்டுவிடுங்கள்.” “இலங்கையை 41 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ. 3.12 லட்சம் கோடி) வாங்கிக்கொள்ள விருப்பமுள்ளதா? உங்களது டெஸ்லாவுக்கு இங்கு சிறந்த கிராஃபைட் கிடைக்கும்.” என பதிவிட்டுருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here