இலங்கையை முழுமையாக திறப்பதற்கான சூழ்நிலை இல்லை என அறிவிப்பு!

0

இலங்கையை முழுமையாக திறப்பதற்கான சுகாதார சூழ்நிலை காணப்படவில்லை என மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை முடக்கலின் பின்னர் நாட்டை திறந்தவேளை காணப்பட்டதை விட நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மூன்று மடங்கு அதிகமாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை குறித்து 100 வீதம் திருப்தியடையமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த முறை முடக்கலின் பின்னர் நாட்டை திறந்தவேளை காணப்பட்டதை விட நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மூன்று மடங்கு அதிகமாக காணப்படுகின்றது இதன் காரணமாக அரசாங்கம் மாத்திரமின்றி மக்களுக்கும் மிகுந்த பொறுப்புணர்வுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை மீள திறப்பதற்கான சூழ்நிலை இதுவரையில்லை என தெரிவித்துள்ள ஹேமந்தஹேரத் எனினும் நாடு அவ்வாறான சூழ்நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

நோயாளர்கள் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் குறைவடைந்துள்ளதை நாட்டை மீள திறப்பதற்கான பச்சை சமிக்ஞை என நான் தெரிவிக்கவில்லை ஆனால் நாங்கள் அந்த பச்சை சமிக்ஞையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம் என ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here