இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா!

0

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒமைக்ரொன் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், 10 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

அத்துடன், மருத்துவ பிராணவாயு வழங்கப்பட வேண்டிய நோயாளர்களின் எண்ணிக்கையும் 8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக, கொழும்பில் நேற்று (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருவதாக அகில இலங்கை தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் கர்ப்பிணி தாதியர்கள் உட்பட 62 தாதியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஏனைய வைத்தியசாலைகளின் அதிகளவான பணிக்குழாமினருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here