இலங்கையை புறக்கணித்த அமெரிக்க ஜனாதிபதி

0

100 நாடுகள் பங்கேற்கும் மெய்நிகர் வழி ஜனநாயக மாநாட்டிற்கு இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு விடுக்காததன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கையை புறக்கணித்துள்ளார்.

ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இந்தியா பாக்கிஸ்தான் மாலைதீவு நேபாளம் ஆகிய தென்னாசிய நாடுகளிற்கு பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும் இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

சீனா ரஸ்யா ஆகிய நாடுகளையும் அமெரிக்க ஜனாதிபதி புறக்கணித்துள்ளார். தாய்வான் பிலிப்பைன்ஸ் மெக்சிக்கோ ஆகிய நாடுகளிற்கும் ஜோபைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

டிசம்பர் 9 – 10 திகதிகளில் 100 நாடுகள் பங்கேற்கும் மெய்நிகர் வழி ஜனநாயகமாநாடு நடைபெறவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here