இலங்கையை தவிர்க்கும் சுற்றுலாப் பயணிகள்…

0

இலங்கையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊக்குவிப்பு திட்டம் நடைமுறைபடுத்தப்படவுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை இலக்கு வைத்தே இந்த ஊக்குவிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு வருவதை இந்திய சுற்றுலா பயணிகள் தவிர்த்து வருகின்றனர்.

இதன் பின்னணியில் இந்த புதிய சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட நிலைமை தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களில் எதிர்மறையான தகவல்கள் வெளியிட்டமையே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அவசர கால சட்டம் காரணமாக இலங்கை வருவதனை பயணிகள் புறக்கணித்து வருகின்றனர்.

எப்போதுமே இலங்கைக்கு அதிகம் வரும் சுற்றுலா பயணிகளாக இந்தியர்கள் காணப்பட்டனர்.

கடந்த மாதம் இந்தியர்கள் இரண்டாம் இடத்திற்கு சென்று பிரித்தானியர்கள் முதலிடத்திற்கு வந்துள்ளனர்.

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹோட்டல் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு டொலர்கள் விரைவாக கிடைக்க விரைவான தீர்வுகள் வழங்கப்பட வேண்டிய சிறந்த துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்நாட்டில் நடத்தும் வாய்ப்பையும் இலங்கை இழந்தது.

இதனால் இலங்கைக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் அதிகளவில் வருகை தரும் மாதமாக ஒகஸ்ட் மாதம் கருதப்படுகிறது.

எனவே எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வெளிநாட்டவர்கள் வரும்போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here