இலங்கையை உலுக்கிய கோர விபத்து! சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0

லுணுகலை – பசறை வீதியின் 13 ஆம் கட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பேருந்தின் சாரதியும், பாரவூர்தியின் சாரதியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்றைய தினம் பதுளை பதில் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போது எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரம் விபத்து இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வீதியின் நிர்மாண பணிகளை முன்னெடுக்கும் நிறுவனத்தினால் இரும்பு கம்பிகளை கொண்டு குறித்த பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக வேகத் தடையும் அமைக்கப்பட்டு வருகின்றது.

எனினும் வீதியை மறிக்கும் வகையில் வீழ்ந்துள்ள பாறையை அகற்றுவதற்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here