இலங்கையை அச்சுறுத்தும் மற்றுமொரு பேராபத்து!

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் மருத்துவர் ஷிலந்தி செனவிரத்ன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கடந்த இரு மாதங்களாக நிலவி வரும் மழையுடனான வானிலை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 4 ஆயிரத்து 561 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்று (புதன்கிழமை) மாத்திரம் 117 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் மருத்துவர் ஷிலந்தி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

காய்ச்சல், தசை வலி போன்ற சில அறிகுறிகள் கோவிட் மற்றும் டெங்கு ஆகிய இரண்டிலும் காணப்படலாம் என்பதில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here