இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

இலங்கையில் அதிக மழையுடனான வானிலையால் 08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 800 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் இவர்களில் மூன்றில் ஒரு வீதமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 7 ஆயிரத்து 873 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here