இலங்கையில் 8 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – 19 வயது இளைஞன் கைது

0

மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையில், அதனைத் திருத்துவதற்காக வீட்டுக்கு வரவழைக்கப்பட்ட உறவுக்கார இளைஞன், அவ்வீட்டிலிருந்த எட்டு வயதான சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவமொன்று பண்டாரவளையில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட எட்டுவயதான சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று கைது செய்யப்பட்ட 19 வயதான இளைஞனை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

அச்சிறுமியின் வீட்டில் சமையலறையுடன் மற்றுமோர் அறை மட்டுமே உள்ளது. அவ்வீட்டுக்கு மின்சாரம் கடந்த 12ஆம் திகதி இரவு திடீரென தடைப்பட்டுள்ளது.

அதனை திருத்துவதற்காக அவ்விளைஞனை வீட்டுக்கு அழைத்துள்ள தாய், குப்பி இலாம்பை சமையலறையில் வைத்து, பற்றவைக்க சென்றுள்ளார் .

இருள் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இளைஞன் அறையின் கட்டலில் படுத்திருந்த சிறுமியை, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here