இலங்கையில் தொடரும் சீரற்ற வானிலையின் காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பு, களுத்துறை, கண்டி, பதுளை, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகையால் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமை மையம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.