இலங்கையில் 6 கோடி ரூபாய் கொள்ளையடித்த நபருக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸார்!

0

தனியார் வங்கியொன்றில் ATM இயந்திரத்துக்கு நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 6 கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் ஹட்டன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பணத்தை மீள் நிரப்புவதற்காக எடுத்துச்சென்ற, தனியார் பாதுகாப்புசேவை நிறுவனம் ஒன்றின் வேன் சாரதியே குறித்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ATM இயந்திரத்துக்கு பணத்தை மீள் நிரப்புவதற்காக, கண்டியிலிருந்து வங்கி அதிகாரியொருவர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் பணத்துடன் ஹட்டன் நகருக்கு வேன் ஒன்றில் பயணித்துள்ளனர்.

அதன்போது, ATM இயந்திரத்துக்கு பணத்தை நிரப்புவதற்கு வங்கி அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் வேனிலிருந்து கீழே இறங்கிய வேளையில், சந்தேகநபரான சாரதி பணத்துடன் வேனில் தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, நிறுவனத்தின் அதிகாரியும், பாதுகாப்பு ஊழியரும் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.

அதன்போது, தலவாக்கலை-லிந்துலை வழியாக அம்பேவல பகுதிக்கு வேன் செல்வதை, தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்துள்ளனர்.

பின்னர். இது தொடர்பில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நுவரெலியா-வெலிமடை பிரதான வீதியில் ரேந்தபொல பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையின் மீபிலிமான முகாம் அதிகாரிகள் குறித்த வேனினை மடக்கிப் பிடித்து, சந்தேகநபரான சாரதியை கைது செய்துள்ளனர்.

பின்னர் குறித்த பணத்தொகை மற்றும் வேனுடன் சந்தேகநபரான சாரதி, கெப்பட்டிப்பொல பொலிஸ் நிலையத்தில் வைத்து ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here