இலங்கையில் 5 தொடருந்து சேவைகள் இயக்கம்

0

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் மேலதிகமாக 5 தொடருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளதாக இலங்கை தொடருந்து சேவை அறிவித்துள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக தமது அடையாளத்தை உறுதிபடுத்தி பயணிகள் தொடருந்தில் பயணிக்க முடியும் என அந்த சேவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி முற்பகல் கண்டி, மஹவ, சிலாபம் ஆகிய பிரதேசங்களிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இந்த தொடருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளன.

அத்துடன் பொலவத்தையிலிருந்து புத்தளத்திற்கு இடையிலும் பெலியத்தையிலிருந்து மருதானை வரையும் இவ்வாறு மேலதிகமாக 5 தொடருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here