இலங்கையில் 3 ஆவது கர்ப்பிணிப் பெண் பலி…! மருத்துவர்களின் முக்கிய அறிவித்தல்

0

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது.

குருநாகல் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 28 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

எவ்வாறாயினும், அவரின் கருவில் இருந்த சிசு, அறுவைச் சிகிச்சையின் மூலம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றுறுதியாகும் கர்ப்பிணித் தாய்மார்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதாகத் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கருத்து தெரிவித்துள்ள விசேட வைத்தியர் சனத் லெனரோல், கொவிட்-19 தொற்றுறுதியாகும் தாய்மார்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் திரிபு ஏற்பட்டால், கொவிட்-19 நியூமோனியா ஏற்படும் தாய்மார்கள், தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் நிலைமை அதிகரித்து காணப்படும்.

எனவே, தாய்மார்கள், தாங்கள் பயன்படுத்தும் மருந்துகளை உரியவாறு பயன்படுத்த வேண்டும் என்று விசேட வைத்தியர் சனத் லெனரோல் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here