இலங்கையில் 19 வயது யுவதி கொரோனா தொற்றினால் மரணம்

0

கண்டி தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த 19 வயது யுவதி, கொரோனா வைரஸ் தொற்றினாலேயே உயிரிழந்துள்ளார்.

மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களம் நேற்று இதனை தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் மேற்படி யுவதி மரணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அவரது உடலுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் முடிவுகள் நேற்று (8) வெளியாகியுள்ளது.

இந்த நிலையிலேயே, அவர் கொரோனா மரணமடைந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

நிமோனியா, ஆஸ்துமா, அதிக சிறுநீர் வெளியேறல் காரணமாகவே மேற்படி யுவதி மரணமடைந்துள்ளார் என்று வைத்தியபரிசோதனையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here