இலங்கையில் 18 – 30 வயதுக்குட்பட்டோருக்கு இம்மாத இறுதிக்குள் கொவிட் தடுப்பூசி

0

இலங்கையில் இம்மாத இறுதிக்குள் 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு முதலாவது தடுப்பூசியை ஏற்றக்கூடிய தாக இருக்கும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் விசேட வைத்தியருமான பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

30 வயதிற்கு மேற்பட்டவர்களுள் 96 வீதமானோருக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்திருப்பதாகவும் இவர்களுக்கு ´இரண்டாவது தடுப்பூசி´ ஏற்றும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப் பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில தினங்களில் மேலும் பெருந்தொகை தடுப்பூசிகள் நாட்டிற்குக் கிடைக்கவுள்ளது என்றும் விஷேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here