இலங்கையில் 15 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மட்டுமே கையிருப்பில்

0

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மசகு எண்ணை தட்டுப்பாட்டினால் சபுஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் இன்று(15) நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான அபாய நிலை காணப்படுவதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

மசகு எண்ணையை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில எடுக்காமை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டது என பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த குற்றம் சுமத்தியுள்ளார்.

சர்வதேச அளவில் மசகு எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விநியோகத்தர்களின் பிரச்சினை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக பொதுமக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மேலும் 15 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சியசாலை தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here