இலங்கையில் 08 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு

0

தவறான நிதியியல் கொள்கையை மேலும் அமுல்படுத்தினால் நிலைமையை மேலும் மோசமாக்கும் மற்றும் வரவிருக்கும் நாட்களில் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் வரை பெரும் மின்வெட்டுக்கு வழிவகுக்கும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) கூறுகிறது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி எவ்வளவு அதிகரித்தாலும் ரூபாவின் பெறுமதியை சுதந்திரமாகப் பெற அனுமதிப்பதே டொலர் நெருக்கடிக்குத் தீர்வாகும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறையால் சுமார் 700 மெகாவோட் மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதால் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும், மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் தொடர் யோசனைகளை முன்வைத்துள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.

நாளுக்கு நாள் மின்வெட்டு பற்றிப் பேசாமல் மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளுக்கான கோரிக்கையை வாரந்தோறும் முன்வைக்க வுள்ளதாகத் தெரிவித்த அவர், மின்வெட்டு நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதகமாக அமையும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here