இலங்கையில் வைத்தியர்களைப் போன்று அடையாளப்படுத்தி பயணித்த 3 பேர் கைது..!

0

இலங்கையில் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இநிநிலையில் வைத்தியர்களை போன்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு பயணித்த 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரஹேன்பிட்டி, கருவா தோட்டம் மற்றும் கொழும்பு – கோட்டை ஆகிய பகுதிகளிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், nநாரஹேன்பிட்டி பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, வைத்தியரைப் போன்று காரில் சென்றுக் கொண்டிருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே போன்று கருவா தோட்ட பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது கொழும்பு – விஜேராம பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , கோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 28 வயதுடைய இளைஞர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு செயற்படும் நபர்கள் தொடர்பில் , நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டு வரும் அனைத்து பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here