இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்….!

0

இலங்கையில் பல நதி நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் நாட்டின் தென் மேற்கு பருவபெயர்ச்சி காரணமாக ஏற்படும் மழையுடனான வானிலையினால் பல நதிப் படுகைகளில் பேரழிவு தரக்கூடிய வெள்ள நிலைமை ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீ ஓயா, தேதுரு ஓயா, மஹா ஓயா, அத்தநாகல்லு ஓயா, களனி கங்கை, களு கங்கை, பெந்தர கங்கை, ஜின் கங்கை, நிலவள கங்கை மற்றும் கிராம ஓயா ஆகியவை வெள்ளப் பெருக்கினால் பாதிக்கும் அபாயம் உள்ளது.

இதனால் குறித்த நீர் நிலைகள் அண்மித்த மற்றும் தாழ்வான பகுதி வாழ் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் பெய்த கனமழையால் நாட்டின் பல நீர்த்தேக்கங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here