இலங்கையில் வெளவால்களுக்கு கொரோனா

0

மனிதர்களுக்கு பரவும் எல்பா மற்றும் பீட்டா ஆகிய கொவிட்19 மாறுபாடுகள் கொண்ட இருவகை விசேட வெளவால்கள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனியின் ரொபர்ட் கோக் நிறுவனத்தின் பேராசிரியரான தேஜானி பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள வெளவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவக் கூடிய வைரஸ் தொடர்பில் இலங்கையில் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, கொஸ்லந்தை பிரதேசத்திலமைந்துள்ள வெளவால் குகையை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வு நடவடிக்கைகாக 395 வெளவால்களின் மாதிரிகள் மற்றும் மலக்குடலிலிருந்து எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 33 வைரஸ் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட எல்பா மற்றும் பீட்டா கொவிட்19 வைரஸ் மாறுபாடு தற்போது பல நாடுகளில் பரவும் பிரிட்டன் எல்பா அல்லது தென்னாப்பிரிக்காவின் பீட்டாவின் துணை வகைகள் அல்ல. ஆனால் இவை கொவிட்19 வைரஸின் நான்கு முதன்மை மாறுபாடுகளில் இரண்டாகும். எனினும் இந்த மாறுபாடுகள் மனிதர்களின் உடலில் பரவி கொவிட் 19 வைரஸ் வரை கொண்டு செல்லுமா? என்பது இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை. எனினும் மக்கள் வௌவால்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்த வேண்டாமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கண்டுபிடிப்பு தொடர்பிலான ஆய்வறிக்கையை சர்வதேச vaccine சஞ்சிகையில் வெளியிட ஆராய்ச்சி குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here