இலங்கையில் வெடித்துச் சிதறும் எரிவாயு சிலிண்டர்கள் அச்சத்தில் மக்கள்…

0

பன்னிப்பிட்டிய – கொட்டாவ பிரதேசத்தில் இன்று அதிகாலை வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தினால் குறித்த வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கொட்டாவ பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் வீட்டில் வசிக்கும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எனினும் அனைத்து விதமான சர்வதேச தரங்களுக்கும் அமைவாகவே, தமது எரிவாயு சிலிண்டர் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதா லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் வர்த்தக மற்றும் விநியோக பிரிவின் பணிப்பாளர் ஜனக்க பத்திரத்ன விளக்கமளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here