இலங்கையில் வீடுகளில் சிகிச்சை பெறும் தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

0

குறைந்த ஆபத்துள்ள கொரோனா நோயாளிகளுக்கு மாத்திரமே வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படும் என பொது சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஏனைய நோய்கள் உள்ளவர்கள் ஒருபோதும் வீட்டு அடிப்படையிலான பராமரிப்புக்காக பதிவு செய்யக்கூடாது மற்றும் வீட்டிலுள்ள பராமரிப்புக்கு ஒருபோதும் சம்மதிக்கக்கூடாது, ஏனெனில் அவர்கள் நிச்சயமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் மிகப்பெரிய பொறுப்பு மக்களிடம் உள்ளது, ஏனெனில் பொதுமக்கள் எப்போதும் வழிகாட்டல்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வீட்டிலும் வெளியேயும், எல்லா நேரங்களிலும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்.

நாளாந்தம் 20,000 பிசிஆர் சோதனைகள் முன்னெடுக்கப்படுகினறன. சில நேரங்களில் அவை 25, 000 ஆகவும் முன்னெடுக்கப்படுகிறது.

பிசிஆர் சோதனைகள் குறைக்கப்பட்டதால், தொற்றாளர்களின் குறைப்பு அல்ல.

தொற்றாளர்களின் ஏற்ற இறக்கமானது கொரோனா நோயாளியின் நெருங்கிய தொடர்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here