இலங்கையில் வீசா கட்டணம் மற்றும் அபராதங்களில் திருத்தம்!

0

வீசா கட்டணம் மற்றும் அபராதங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2021 ஓகஸ்ட் 18ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டுள்ள 2241/37 எனும் அதி விசேட வர்த்தமானி பத்திரிகை அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளுக்கமைய, குறித்த கட்டணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளுக்கு ஏற்ப வீசா இல்லாமல் அல்லது வீசா காலத்திற்கு மேலதிகமாக இலங்கையில் தங்கியிருப்போருக்கு வீசா கட்டணத்துடன் 500 டொலர் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Gallery
Gallery
Gallery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here