இலங்கையில் விபச்சார விடுதியில் இருந்து 4 பெண்களுடன் அறுவர் கைது

0

இலங்கையில் ராஜகிரிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு பிரிவினரால் திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக செயற்பட்டு வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது நான்கு பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவல, கூரே மாவத்தை மற்றும் எதுல் கோட்டே ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை போது இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

வனாதவில்லுவ, அங்குனாகொலபெலெஸ்ஸ, எம்பிலிப்பிட்டிய, களனி ஆகிய பகுதிளைச் சேர்ந்த 21 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கொழும்பிலுள்ள ஆடை தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முற்றுகையிடப்பட்ட இரண்டு இடங்கள் ஏற்கனவே சுற்றிவளைக்கப்பட்டவை என தெரிவிக்கும் காவல்துறை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here