இலங்கையில் வாரஇறுதியில் கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள்?

0

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு வார இறுதியில் போக்குவரத்து தடைகளை விதிப்பதா என்பது குறித்து ஆராய்வதற்காக இன்று காலை ஜனாதிபதிக்கும் கொவிட் தொடர்பான செயலணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்தி;ப்பில் அமைச்சர்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ சுகாதார நிபுணர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 11 ம் திகதி 150க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையிலும் நேற்று 3000க்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலும் இன்று இந்த முக்கிய சந்திப்பு இடம்பெறுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here