இலங்கையில் வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம்

0

கேகாலை மாவட்டம், வரக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துல்கிரிய, மா ஓயாவுக்கு அருகிலிருந்து வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், ஆணொருவரின் சடலத்தை, வரக்காபொல பொலிஸார் நேற்று (13) மாலை மீட்டுள்ளனர்.

உடுகம, அரத்தன பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பன்னல பிரதேசத் தைச் சேர்ந்தவர் என்றும் இவரை கடந்த 10ஆம் திகதி முதல் காணவில்லை என்றும் அவரது மனைவி பன்னல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக வும் விசாரணைகளில் தெரியவந்துளள்ளது.

பிரேதப் பரிசோதனைக்காக கேகாலை வைத்தியசாலை யின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here